வாட்ஸ் அப் வழியாக கல்வி

 கொரோணா ஊரடங்கு மார்ச் 27ல் ஆரம்பித்தது
பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன
என்னை ஆன்லைன் கிளாஸ் பக்கம் திருப்பியது
ஆன்லைன் கிளாஸ்?
அதற்கு ஸ்மார்ட் போன் வேண்டும்...
இணைய இணைப்பு வேண்டும்.... ஆன்லைன் கிளாஸ் பற்றிய அறிவும் வேண்டும்...
 என்ன செய்வது? 
கூகுளில் ஆன்லைன் கிளாஸ் பற்றிய அறிவை தெரிந்து கொண்டேன். என்னிடம் ஸ்மார்ட் போன் உள்ளது. ஆனால் எனது மாணவர்கள் சில பேரிடமே ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் உள்ளவர்களிடமும் இணைய இணைப்பு இல்லை. அதனால் என்ன? நான் வாட்ஸப் கிளாஸ் ஆரம்பித்தேன். 
வாட்ஸ்அப்பில் அந்தந்த வகுப்புகளுக்கு என ஒரு குழுவை உருவாக்கி அந்தந்த வகுப்புகளுக்கு தேவையான
பாடங்களை ஸ்கிரீன் ரிக்கார்டிங் துறையுடன் உருவாக்கியும் யூடிப் காணொளிகளை பகிர்ந்தும் பாடத்திற்கு தொடர்புடைய பணித்தாள்களை அனுப்பியும் கூகுள் ஃபார்ம் வழியாகவும் ஆன்லைன் கிளாஸ் மூலம் மாணவர்களுக்கு புலனம் வழியாக கற்பித்தேன். சிலநாட்கள் சிறப்பாக சென்ற இந்நிகழ்வு பின் பெற்றோர்களிடம் பணம் போதாமையால் தடைப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்