Posts

Showing posts from April, 2021

ஆக்சிஜனேற்றம் பற்றி...

ஆக்சிசனேற்ற நிலை   (oxidation state)  சில நேரங்களில் ஆக்சிசனேற்ற எண் எனவும் குறிப்பிடப்படுகிறது, ஒரு வேதியியல் சேர்மத்தில் ஒரு அணுவின் ஆக்சிசனேற்றத்தின் அளவை அதாவது எலக்ட்ரான்களின் இழப்பை ஆக்சிசனேற்ற நிலை அளவு அல்லது ஆக்சிசனேற்ற எண் விவரிக்கிறது. கருத்தியல் ரீதியாக ஆக்சிசனேற்ற எண் நேர்மறை , எதிர்மறை அல்லது பூச்சியமாக இருக்கும். வெவ்வேறு தனிமங்களின் அணுக்களுக்கான அனைத்து பிணைப்புகளும் ஒரு சகப்பிணைப்பும் இல்லாமல் 100% அயனியாக இருந்தால், ஓர் அணுவிற்கு இருக்கும் கற்பனையான மின்சுமை ஆக்சிசனேற்ற நிலை ஆகும். உண்மையான பிணைப்புகளுக்கு இது ஒருபோதும் சரியாக இருக்காது.ஆக்சிசனேற்றம் என்ற சொல்லை அன்டோயின் இலவாய்சியர் என்ற பிரான்சிய வேதியியலாளர் முதன் முதலில் ஆக்சிசனுடன் ஒரு பொருளின் வினையைக் குறிக்கவே பயன்படுத்தினார். ஒரு பொருள் ஆக்சிசனேற்றப்பட்டவுடன், எலக்ட்ரான்களை இழக்கிறது என்ற உண்மை நீண்ட காலத்திற்குப் பின்னரே உணரப்பட்டது. எனவே ஆக்சிசனேற்ற நிலை என்பதை உணர்த்தும் பொருளுக்கான வரையறை மேலும் நீட்டிக்கப்பட்டது. எந்தெந்த வினைகளில் எலக்ட்ரான் இழக்கப்படுகிறதோ அவையெல்லாம் இவ்வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன.

பாக்டீரியாவுக்கு கலாம் பெயர்.

Image
உலகில் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் உயிரினம் எது? ம்... ம்.... ம்....  சொல்ல முடியலையா? உலகில் அதிகமாக வசிப்பவை நம் கண்களுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் தான். பாக்டீரியாக்களில் நன்மை செய்பவை தீமை செய்பவை என இரு வகைகள் உள்ளன.      நுண்ணோக்கி என்கிற ஒன்று கண்டுபிடிக்காத வரை நுண்ணுயிர்கள் பற்றி ஏதும் அறியாமலே மனித இனம் இருந்தது. நுண்ணோக்கியை முதலில் கண்டறிந்தவர் ஆண்டன் வான் லீவன் ஹாக் ஆவார். கண்டுபிடிப்பு நிகழ்ந்தவுடன் விஞ்ஞானிகளின் முயற்சி மூலம் பல பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன. ஆனாலும் நாம் கண்டறியாத பல பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள் இன்னும் உள்ளன.   அவ்வாறு  ஒரு பாக்டீரியா கண்டறியப்பட்டது.  சர்வதேச விண்வெளி நிலையத்தில்  பராமரிப்பு மற்றும் துப்புரவு அமைப்பான உயர் செயல்திறன் கொண்ட துகள் வடிகட்டி அல்லது ஹெப்பா வடிப்பானில்  இந்த வகை பாக்டீரியா காணப்பட்டது. இது அகில உலக விண்வெளி ஆய்வு மையத்தில் (இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில்) மட்டும் காணப்படுகிறது.இது வரை பூமியில் கண்டறியப்படவில்லை. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியா பலவிதமான கதிரியக்கத்தைத் தாங்கும். இது நன்மை செய்யும் பாக்டீரி