காந்தங்கள்

 காந்தத்தைப் பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது. காந்தம் என்பது சுவாரஸ்யமான மற்றும் விசித்திரமான ஒரு பொருளாகும். காந்தங்கள்  பற்றிய சில உண்மைகளை இங்கு காண்போம்.

1)காந்தத்திற்கு ஆங்கிலத்தில் magnet (மேக்னெட்) என்று பெயர். இது கிரேக்க சொல்லான 'மகனிசியேக்கல்' என்பதிலிருந்து வந்ததாகும்.

2) காந்தத்திற்கு இரண்டு துருவங்கள் உள்ளது. அவை  வடதுருவம் மற்றும் தென் துருவமாகும். காந்தத்தை எத்தனை துண்டுகளாக வெட்டினாலும் அவை எல்லாவற்றுக்கும் வட மற்றும் தென் துருவங்கள் இருக்கும்.

3) காந்தத்தின் வடதுருவப் எப்போதும் புவியின் வடதுருவத்தை நோக்கியே நிற்கும்.

4) காந்தத்தைச் சுற்றி காந்த விசை பரவிஉள்ள பகுதியை காந்த புலம் என்பர்.

5) ஒரு காந்தத்தின் வட துருவம் அருகில் மற்றொரு காந்தத்தின் வடதுருவப் தைக் கொண்டு சென்றால் அலைகள் ஒன்றையொன்று விலக்கும். வடதுருவப் தின் அருகே தென்துருவத்தைக் கொண்டு சென்றால் அவை ஒன்றுக்கொன்று ஈர்க்கும்.

     இதையே காந்தத்தின் ஒத்த துருவங்கள் விலக்கும்,  எதிர்துருவங்கள் ஈர்க்கும் என்பர்.

6) காந்தங்கள் இயற்கையில் கிடைப்பவை இயற்கை காந்தம்,  நம்மால் தயாரிக்கப்படுபவை  செயற்கை காந்தம் என இரு வகையாகும்.

7) இயற்கை காந்தங்களுக்கு அதிக சக்தி கிடையாது. செயற்கை காந்தங்கள்  இக்காலத்தில் ஒரு இரும்பு கன்டயினரையே தூக்குகின்றன. அந்தளவுக்கு சக்தி வார்த்தையாக உள்ளன.

8)காந்தங்கள் நவின் காலத்தில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

Comments

Post a Comment

Comment from message

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்