அச்சமென்பதில்லையே!

  அருமையான காலை பொழுது.
கதிரவனின் ஒளிக்கீற்றுகள் அந்த அடர்ந்த கானகத்தின் தரைப்பகுதியை அடையும் முயற்சியில் தோற்று நின்றன. அங்கு வாழும் அனைத்து உயிரினங்களும் தங்களது அன்றைய தினத்தை தொடங்கின. 
 அங்கு ஒரு அழகான பச்சைக் கிளி வாழ்ந்து வந்தது. அக்கிளிக்கு மூன்று பிள்ளைகள். முதலாமவன் பெயர் ராஜு. இரண்டாமவர் பெயர் சந்துரு. மூன்றாமவன் பெயர் சாமி. அந்த மூன்று பேரில் மூத்தவனான ராஜு மட்டும் மிகவும் பயந்தாங்கொள்ளியாக இருந்தது. தாய்க்கிளி எவ்வளவோ முயன்றும் ராஜுவின் பயத்தை மாற்ற முடியவில்லை.
   ஒருநாள் அம்மா கிளி தன் பிள்ளைகளுக்கு பறக்க கற்றுக் கொடுத்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம்கிளிகள் பாடத்தைக் கற்று அழகாக பறக்க ஆரம்பித்தன. 
முதல் கிளி மட்டும் முயற்சிக்கவே இல்லை. மரத்திலிருந்து கீழே குதித்து படபடவென்று உன் இறக்கைகளை அடித்து பறக்க முயற்சி செய். நீ பறந்து விடலாம் என்று தாய் சொன்னது. 
       "ஐயோ.... இல்லை.. இல்லை.... நான் கீழே விழுந்து விடுவேன். அதுமட்டுமல்ல, மேலே பறக்கும் போது காற்று அதிகம் வீசும். அதனால் தன் வேறு பக்கம் சென்று விழுந்து விடுவேன். மேலும் உயரத்தில் பருந்து, கழுகு எல்லாம் பறக்கும். அவைகள் என்னைப் பிடித்து கொண்டு போய்விடும். நான் மாட்டேன்" என்றது.
    எவ்வளவோ சொல்லிப் பார்த்த தாய் கிளி ஒரு கட்டத்தில் மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டது.  எதிர்பாராத நேரத்தில் கீழே விழுந்த பிள்ளை கிளி படபடவென இறக்கைகளை அடித்து பறக்க ஆரம்பித்தது.
        மேலே...மேலே... உயரே... உயரே..... 
பறந்தது.
    அங்கிருந்து இந்த அழகான உலகத்தைப் பார்த்து ஆனந்தம் கொண்டது பிள்ளை கிளி.
      நம்மில் சிலர் இப்படித்தான்.... நம்மிடம் திறமைகள் இருந்தும் பல
திறமைகள் இருந்தும் பயத்தினால் அதை வெளிப்படுத்தாமல் தம் திறமைகளை புதைத்து வைத்து கொள்கின்றனர். 
      இந்த பயத்தை கைவிட்டு அவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!🙂


Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்