Posts

Showing posts from November, 2020

வரிக்குதிரை

Image
வரிக்குதிரை   பாலூட்டி  இனத்தைச் சேர்ந்த ஒரு  விலங்கு  ஆகும். இது ஒரு  தாவர உண்ணி . இது  குதிரை  இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில்  குதிரை ,  கழுதை  போல  ஒற்றைப்படைக் குளம்பிகள்  வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை  தமிழில்  வரிக்குதிரைகள் எனப்படுகின்றன. வரிக்குதிரைகள் ஒரு சமூகவிலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன. [1]  நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை. காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள்வரை உயிர் வா