Posts

Showing posts from August, 2021

Material Science (பொருட்களின் அறிவியல்)

Materials science , the study of the properties of solid  materials  and how those properties are determined by a material’s  composition  and structure பொருள் அறிவியல், திடப்பொருட்களின் பண்புகள் மற்றும் அந்த பண்புகள் ஒரு பொருளின் கலவை மற்றும் அமைப்பால் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய ஆய்வு ஆகும்.

தமிழகத்தில் செப்.1 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க திட்டம்

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள

குறள் இன்று

திருக்குறள் : இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு மு வ உரை : மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும். சாலமன் பாப்பையா உரை : மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.

உங்களுக்குத் தெரியுமா?

விலங்குகளில் ஆண், பெண், இளமையானவை ஆகியவற்றிற்குத் தனித்தனியான பெயர்கள் தமிழில் உண்டு. அவை பற்றி இங்கு காண்போம். பெயர் ஆண் பெண் இளமைப் பெயர் ஒலி உண்ணி மாடு எருது பசு கன்று எருது எக்காளம், பசு கதறும் தாவர உண்ணி ஆடு கடா மறி குட்டி கத்தும் தாவர உண்ணி நாய் கடுவன் பெட்டை குட்டி குரைக்கும் அனைத்துண்ணி பூனை கடுவன் பெட்டை குட்டி சீறும் அனைத்துண்ணி பன்றி அனைத்துண்ணி மான் கலை பிணை மறி,  கன்று , குட்டி தாவர உண்ணி மரை தாவர உண்ணி நரி ஓரி பாட்டி ஊளையிடும் ஊனுண்ணி ஓநாய் குட்டி ஊளையிடும் ஊனுண்ணி குரங்கு தாட்டான் மந்தி குட்டி அலம்பும் அனைத்துண்ணி ஒட்டகம் தாவர உண்ணி கழுதை கத்தும் தாவர உண்ணி சிங்கம் பெட்டை ஏறு குருளை கர்ச்சிக்கும் / முழங்கும் ஊனுண்ணி புலி பறழ் உறுமும் ஊனுண்ணி யானை களிறு பிடி கன்று

டிஜிட்டல் வாலெட்

டிஜிட்டல் வாலெட்  என்பது ஒரு மென்பொருள். தற்பொழுது இது உலகளாவிய பயன்பாட்டிற்கு வந்துள்ளது. உலகில் பலராலும் மிகுதியாக பயன்படுத்தப்படும் மென்பொருளாக திகழ்கிறது. உங்களுடைய  கடன் அட்டை ,  பற்று அட்டை , முகவரிகள், உரிமங்கள் என எல்லாவற்றையும் இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அது இரகசியக் குறியீடுகளாக  திறன்பேசியில்  ‌அமர்ந்து கொள்ளும். அதற்கென தனிப்பட்ட கடவுச் சொற்களை வைத்துக் கொள்ளலாம். கூகுள் நிறுவனம் டிஜிட்டல் பணப்பை மென்பொருளை முதன் முதலில் 2012 ஆண்டு அளவில் சந்தைப்படுத்தியது. ஒரு பொருளை கடை ஒன்றில் வாங்கும் போது, திறன்பேசியை கடையிலுள்ள கருவியில் தட்டினால் போதும். உங்கள் கடனட்டை மூலம் பணம் செலுத்தப்பட்டு விடும். இதற்கு 'அண்மைத் தகவல் தொடர்பு' ( Near field communication ) எனப்படும் அருகாமைத் தொடர்பு தொழில்நுட்பம் அவசியம்.  ஆண்ட்ராய்டு இயங்குதளம் , துவங்கி வைத்த இந்த பயணம் இன்று பல வடிவங்களில், பல இயங்கு தளங்களில் வளர்ந்து ஆப்பிள்  ஐஓஎஸ் -இல் 'பாஸ்புக்' ( Passbook ) என்னும் பெயரில் நுழைந்திருக்கிறது.

டெலிகிராம்

சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டுமானால் எந்த ஆப்  பயன்படுத்தலாம் எனக் கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக telegram app உள்ளது (திரைப்படங்கள் உள்பட) என்பது தான். மேலும் ஏடகம் குழுவில் நமக்கு பயன்படும் பல புத்தகங்கள் உள்ளன என்றும் படித்துப் பாருங்கள் என்றும் கூறினார். உள்ளே சென்று பார்த்த எனக்கு வியப்பு. நான் தேடிய பல புத்தகங்கள் அங்கே இருந்தன. எனக்கு பயன்படுவதை என் நண்பர்களாகிய உங்களிடம். பகிர்ந்து கொள்கிறேன்.

குறள் இன்று

திருக்குறள் : செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃதனிற் கூரிய தில் மு வ உரை : ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை. சாலமன் பாப்பையா உரை : எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை. கலைஞர் உரை : பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது