Posts

Showing posts from April, 2023

எளிமையான வாக்கியங்கள்

I have to go  - நான் போக வேண்டும். Remove it. - அகற்று/நீக்கு Fold the clothes. - துணியை மடித்து வை. It is easy. -  இது எளிதானது. Don't do it. -  அதை செய்ய வேண்டாம். Book a taxi. - ஒரு taxi-யை முன்பதிவு செய்யுங்கள். Make sure. - உறுதி செய்யுங்கள். Do you remember? - நினைவிருக்கிறதா? Do you think? - நீ நினைக்கிறாயா? Pour the water. - தண்ணீரை ஊற்றவும். Absolutely right. - முற்றிலும் சரி, Go away. - போய்விடு. Cool down - அமைதியாயிரு Select all. - அனைத்தையும் தெரிவுசெய். Tam fine. - நான் நன்றாக இருக்கிறேன். Buy it, if you like. - நீங்கள் விரும்பினால் அதை வாங்கவும். I am sorry. - என்னை மன்னிக்கவும்.

ன,ண, ர,ற,ல,ள,ழ வேறுபாடு

பின்வரும் வினாக்களுக்கு உரிய பொருள் தரும் வார்த்தைகளை எடுத்து எழுதுக.  1. சூரியன் இருக்கும் இடம்  ______________ ( வானம் / வாணம் ) 2. பார்க்க உதவும் உறுப்பு _______ (கன் / கண் ) 3. மருத்துவ குணம் கொண்டது ______________  ( தேன் / தேண்) 4. நுங்கு இந்த மரத்தில் கிடைக்கும்__________ ( பணை / பனை ) 5. எது வாங்குவதற்கும் இது அவசியமானது ______________ ( பணம் / பனம் ) 6. வீட்டைக் காக்கும் காவலன் _______________ (னாய் / நாய் )  7. கூட்டமாக வாழும், கழிவுகளை உண்ணும் ________________ ( பண்ரி / பன்றி ) 8. தேனைச் சேகரிப்பது ________________ ( தேநீ / தேனீ ) 9. களைப்பாக இருக்கும் போது குடிப்பது ____________ ( தேணீ / தேநீர்)  10. மிகப்பெரிய காட்டு விலங்கு___________ ( யானை / யாணை )  11.பூமியை இப்படியும் சொல்லலாம் _______________ ( உலகம் / உளகம் )  12. நீரைத் தேக்கி வைக்க உதவுவது ______ ( அனை / அணை ) 13. எண்களில் முதலில் வருவது ___________ ( ஒண்று / ஒன்று)  14. உயரமான இடத்தில் ஏற உதவுவது ______________ ( ஏனி / ஏணி ) 15. சுவரில் அடிப்பது__________ (ஆனி / ஆணி ) 16. மீன் பிடிப்பவர் ______________ ( மீணவர் /

எண்ணும் எழுத்தும்

 எண்ணும் எழுத்தும் வகுப்பறை எங்கள் இனிய வகுப்பறை..... ஒன்னு ரெண்டு மூனு குழம்புல கொதிக்குது மீனு... நாலு அஞ்சு ஆறு எங்க ஸ்கூலு சூப்பரு... டுர்ரு டக்கரு டுர்ரு டக்கரு பாட்டுப் பாடி கத்துப்போம் உம் சொல்லி உம் சொல்லி கதை கேட்டும் கத்துப்போம்... யாரு வந்தாலும் எந்த புக்க கொடுத்தாலும் கடகடன்னு வாசிப்போம் பொருள் புரிஞ்சு வாசிப்போம்... எத்தன பேரு இருந்தாலும் எந்த ஸ்டேஜா இருந்தாலும் என் மேடை என் பேச்சுன்னு வெளுத்து வாங்கிவோம்... என் ஆசையை எல்லாம் என் பக்கத்தில் அழகாக எழுதி அம்மா அப்பாவிடம் காட்டுவோம் டபக்கு டுபுக்குன்னு விளையாடி ஒன்னு ஒன்னா கத்துப்போம் எங்கள் டேலன்ட படிப்படியா காட்டுவோம்.... இது எண்ணும் எழுத்தும் வகுப்பறை எங்கள் இனிய வகுப்பறை.....

என்ன செய்ய

 சிறு வயதிலேயே பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதுண்டு.... எனக்கும் அது போன்று இருப்பதால் வியப்பில்லை தான். அதில் ஒன்று தான் படம் வரைந்து....  நான் படம் வரைந்ததைப் பார்த்த (கிறுக்கியதை) என் அம்மா "பிக்காஷோ வரைந்த படம் போல் இருக்கிறது" என்று பாராட்டினார். அன்று முதல் நான் மிகச்சிறந்த ஓவியராக வேண்டும் என்று உறுதி பிறந்தது...  சில வருடங்கள் கழித்து சதுரங்கம் கற்று விளையாட ஆரம்பித்தேன். சிறந்த சதுரங்க வீரனாக வேண்டும் என்று... சில பல அறிவியல் கண்காட்சியினை கண்டவுடன் அறிவியல் அறிஞர் ஆக உறுதி கொண்டேன்... பல நேரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிரிக்கெட்டினை பார்த்து ________ ...... இப்படியே பலப்பல...... கடைசியில் ஒன்றுமே அடையாமல்.....