நாணய பழக்கம்

என் நண்பர் ரெ சிவகுமாரிடம் நேற்று இரவு பேசியபோது அவர் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 நாம் படித்த போது வாய்ப்பாட்டினை 16 வரைக்கும் மனப்பாடம் செய்ய சொல்வார்கள் அஃது ஏன் என்று தெரியுமா?

அந்த காலத்தில்
ஒரு ரூபாய்க்கு பதினாறு அனா.
அந்த பதினாறு என்ற எண்ணிக்கைக்கு ஏற்பவே வாய்ப்பாட்டினை 16 வரை சொல்லும் பழக்கம் ஏற்பட்டது. 

அது சரி... அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நாணய முறையை இங்கு காண்போம்.

ஒரு ரூபாய்க்கு பதினாறு அனா.
ஒரு அணாவுக்கு நான்கு காலணா. பன்னிரண்டு பைசா (தம்பிடி). மூன்று பைசா கொண்டது ஒரு காலனா. நான்கு பைசாக்கள் ஒரு துட்டு. ஆறு பைசாக்கள் கொண்ட அரையனா ஒன்றரைத் துட்டு என்று வழங்கப்பட்டது. ஒரு அனா, வளைவுகள் அடங்கிய விளிம்பு கொண்டவட்ட நாணயம், சதுர வடிவமான இரண்டனா, சிறு வட்டவடிவ வெள்ளிக்காக அரைக்கால் ரூபாய், அதனினும் பெரிய வட்ட வெள்ளி'கால் ரூபாய், வெள்ளியினால் ஆன அரை ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்