Posts

Showing posts from February, 2021

காய்தல் - உவத்தலின்றி

பல நேரங்களில் நாம் கோபம் முதலான உணர்ச்சிகளுக்கு ஆளாகி விடுகிறோம்.  அதனால் என்ன, ஏது என்று அறியாமலேயே மற்றவர் மீது கோபம் கொண்டு நம் வார்த்தைகளை சிதற விடுகிறோம். நாம் வார்த்தைகளை வீனாக்கக் கூடாது. அது கடவுளுக்கு ஒப்பானது.ஒரு விஷயம் குறித்து நாம் ஒரு கருத்து கொண்டிருக்கலாம். மற்றவர் அந்த விஷயம் குறித்து வேறு ஒரு கருத்தினை நம்மிடம் சொல்லும்போது சடாரென்று உணர்ச்சிக்கு ஆளாகாமல் நண்பர் சொன்ன கருத்து, நாம் கொண்டிருக்கும் குறித்து ஆராய வேண்டும். எது சரியோ அந்த கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.      எந்த ஒரு விஷயத்தையும் காய்தல் உவத்தலின்றி அணுக வேண்டும். நல்லது என கண்டதை அச்சமின்றி எடுத்துக் கூற பழக வேண்டும்.

தமிழர் வகுத்த காலங்கள்

நம் முன்னோர்கள் ஓர் ஆண்டை  கார்காலம் ,  குளிர்காலம் , ​ முன்பனிக்காலம் ,  பின்பனிக்காலம் ,  இளவேனில்காலம் ,  முதுவேனில்காலம்  என ஆறு பருவங்களாக பிரித்தனர். கார்காலம்: இது தமிழ் மாதமான  ஆவணி ,  புரட்டாசி  யை உள்ளடக்கியது. குளிர்காலம்: இது தமிழ் மாதமான  ஐப்பசி ,  கார்த்திகை  யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும். முன்பனிக்காலம்: தமிழ் மாதமான  மார்கழி ,  தை  யை உள்ளடக்கியது. பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான  மாசி ,  பங்குனி  யை உள்ளடக்கியது. இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான  சித்திரை ,  வைகாசி  யை உள்ளடக்கியது. முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான  ஆனி ,  ஆடி  யை உள்ளடக்கியது. நம் முன்னோர்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான  முல்லை ,  குறிஞ்சி ,  மருதம் ,  நெய்தல் ,  பாலை  போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் கா

இணையம்

இணையம்.. இன்று நம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. பஸ், இரயில், விமான டிக்கெட், தேர்வு முடிவு, கல்லுாரி அட்மிஷன், அரசு வழங்கும் சேவைகள், திரைப்படம், 'டிவி' காட்சிகளைப் பார்த்தல், பாட்டு கேட்டல், இணைய தொலைபேசி, வங்கி பணப் பரிமாற்றம்,  சான்றிதழ்கள் பெறல் என இன்னும் பல செயல்பாடுகளில் இணையம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இத்தகைய இந்த இணையத்தைப் பற்றி நாமும் அறிந்து கொண்டு நம் வாழ்வில் திறமையாகப் பயன்படுத்துவோம்.

எத்தனால் பற்றி அறிவோம்.

Image
எத்தனால்?... நாமெல்லாம் அறிவியல் பாடத்தில் படித்தது... எத்தனால் பற்றி சில நொடிகளில்... எத்தனால் - எத்தில் ஆல்ககால்; துகள் ஆல்ககால்; தூய ஆல்ககால்; ஐதராக்சி ஈத்தேன்; குடிக்கும் ஆல்ககால்;எத்தில் நீரேற்று; தனி ஆல்ககால் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதனுடைய  ஐயூபிஏசி பெயர் எத்தனால்.இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையை கொதிக்க செய்து எத்தனால் பெறப்படுகிறது.  இதன் மூலக்கூறு வாய்பாடு -  C 2 H 6 O நிறமற்ற நீர்மமான இதன் அடர்த்தி  0.789 கி/செ.மீ3 ஆகும். இது தீப்பற்றி எரியக்கூடியதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உள்ளது. எத்தனால் மாற்று எரிபொருளாகவும் பயன்படுகிறது.

திருக்குறள்

குறள்:394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். குறள் விளக்கம்: மகிழும் படியாகக் கூடிப் பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

விண்வெளியில் நடைப்பயணம்

விண்வெளியில் நடப்பது.... என்ன விண்வெளியில் நடப்பதா?  ஆமாம் விண்வெளியில் நடப்பது தான்.  நடப்பது என்றால் விண்கலத்திற்கு வெளியே இணைந்து மிதப்பது. அவ்வாறு  விண்வெளியில் முதல் நடைப்பயணத்தை நிகழ்த்தியவர் அமெரிக்க விண்வெளி வீரர் புரூஸ் மெக்கான்ட்லெஸ்  ஆவார்.

உலகம்

இந்த உலகம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவரவரின் அனுபவமே அவரவரின் உலகம்.
இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற கருவி, கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணினி. கணினி துறையின் வளர்ச்சியே இணையம். இணையத்தை பயன்படுத்தாத எத்துறையும் இல்லை எனலாம். வர்த்தகத் துறையில் இணையத்தின் பயன்பாட்டினால் உலகப் பொருளாதாரம் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. இன்று கல்வித் துறையில் வகுப்பறைக் கற்பித்தல் முதல் நிர்வாகம் வரையில் அனைத்து செயல்பாடுகளிலும் கணினி பயன்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைவதற்கும், ஆசிரியரின் கற்பித்தல் திறன் அதிகரிக்கவும் கணினி இன்றியமையாதது.

திருக்குறள்

‘'நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு' ‘நேற்றிருந்தான், இன்று அவன் இல்லை என்று சொல்லும் நிலையாமையை மிகுதியாக உடையது இவ்வுலகம்' என்பது இதன் பொருள். இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை. ஆகவே நாம் வாழும் நம்முடைய காலத்தை ஆக்கப்பூர்வமாக வாழ முயற்சிப்போம்.

மாணவர்கள் படைப்புகள்

Image
அழகான படைப்பினை உருவாக்கிய மாணவர்கள் பிரகதீஷ் மற்றும் பூஜா.

திருமந்திரம்

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே                             திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திருவள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பின் சிறப்பையும், இன்றியமையாமையையும் எடுத்துரைத்துள்ளனர். சைவர்களின் இறைவன் சிவன். அவன் யார்? அவன் இயல்பு எத்தகையது என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. அன்புதான் எங்கள் சிவன். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்க்கும்.