மனத்தின் தீரம்

விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் உங்களுக்காக...     விவேகானந்தர் துறவியான பிறகு ஒருநாள் கன்னியாகுமரி வந்தார்..  கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறையை (அப்போது அது மொட்டை பாறை)  உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார். 
 கடல் அலைகள் வருவதும் அந்தப் பாறையின் மீது மோதுவதுமாக இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த விவேகானந்தருக்கு அந்தப் பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் திடிரென உதித்தது. உடனே அவர் நேராக அங்கிருந்த மீனவர்களிடம் சென்று என்னை அந்தப் பாறையில் சென்று ஏற்றி விடுங்கள். நான் அங்கு தியானம் செய்ய வேண்டுமென கேட்டார். 

 அதற்கு அங்குள்ள மீனவர்கள் காலணா கூலி கேட்டார்கள். விவேகானந்தரிடம் பணம் இல்லை.   உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா சட்டென் று கடலில் குதித்து, சடசடவென்று நீச்சலடித்து, அந்த மொட்டை பாறைக்கு சென்றார். அதன்மீது ஏறிய அவர் அங்கு  48 மணி நேரம் தியானம் செய்தார்.
அதன்பிறகுதான் அந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்று பெயரே வந்தது.

இந்த சம்பவம் விவேகானந்தரின் மன வலிமையை பறைசாற்றிய ஒரு சம்பவம். இது போல நாமும் நமது மனதைப் பண்படுத்தி மன வலிமையுடன் வாழ்வோம்.

Comments

Post a Comment

Comment from message

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்