நமது தேசிய நுண்ணுயிரி

 நம் நாட்டின் தேசிய விலங்கு, தேசிய பறவை, எல்லாம் நமக்குத் தெரியும். நம் நாட்டின் தேசிய நுண்ணுயிரி பற்றி தெரியுமா?

என்னது தேசிய நுண்ணுயிரியா?

ஆமாம் தேசிய நுண்ணுயிரி தான். அதுபற்றிய செய்தியைத் தான் இங்கு காணப்போகிறோம்.

நமது தேசிய நுண்ணுயிரி லாக்டோ பாசில்லஸ் பாக்டிரியா ஆகும்.

2012 அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பன்முகத்தன்மை பாதுகாப்பு மற்றும் கல்விக்கான சர்வதேச மாநாட்டில் லாக்டோ பாசில்லஸ் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டது.

சில லாக்டோ பாசில்லஸ் பாக்டிரியாக்கள் தயிர், சீஸ், சார்க்ராட் (ஒரு வகை உணவு), ஊறுகாய், பீர், ஒயின், சைடர், கிம்ச்சி, கோகோ, பிற புளித்த உணவுகள், மற்றும் விலங்குகளின் தீவனம் போன்றவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இது நுண்ணுயிரியாக இருந்தாலும் நமக்கு நன்மை செய்யும் வகையில் இயங்குவதால் தான் இதை தேசிய நுண்ணுயிரியாக அறிவித்தனர்.




Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்