Posts

Showing posts from July, 2021

இன்றைய குறள்

திருக்குறள் : குறள்: 752 அதிகாரம் : 76 இயல்: பொருட்பால் பால்: கூழியல் அதிகாரம்: பொருள் செயல்வகை இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு மு வ உரை : பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர். சாலமன் பாப்பையா உரை : பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர். கலைஞர் உரை : பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.