வேதியியல் நம் வாழ்வில்!

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்தப் பதிவில் நாம் பார்க்க இருப்பது நம் தினசரி வாழ்வில் வேதியல் என்னும் தலைப்பாகும். தினசரி வாழ்வில் நாம் வேதியியலை பயன்படுத்தாத நிகழ்வுகள் பெரும்பாலும் இல்லையெனலாம். நாம் தினசரி பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் வேதியல் சேர்மம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா காலையில் நாம் பல் துலக்கும் பற்பசை ஒரு வீதியில் கலவை அது போல காலையில் அவருக்காக அணுகும் தேநீர் ஒரு வீதியில் சுய நமக்குத் தருகிறது சர்க்கரை ஒரு வேதிக் கூட்டுப்பொருள்தான். இவ்வளவு ஏன் சுவாசிக்கும் காற்றிலிருந்து, உண்ணும் உணவு, குடிக்கும், குளிக்கும் நீர், உடுத்தும் உடை, ஏன் நம் உடலே ஒரு கரிமச் சேர்மம் என்பதை உணர்ந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

நம் உடல் கரியாலானது. நாம் சுவாசிக்கும் காற்றில், ஆக்சிஜன் உள்ளிட்ட காற்றின் கலவை உள்ளது. நம் நுரையீரலில் கிரகிக்கப்படும் ஆக்சிஜன், செல்களால் பயன்படுத்தப்பட்டு கரியமில வாயுவாக மாற்றி வெளியனுப்புகிறது. நாம் தினசரி உண்ணும் உணவில் உள்ள மாவு, கொழுப்பு, புரதங்கள் கரிமச்சேர்மங்களே. நாம் சமையலறை ஒரு சிறு வேதியியல் ஆய்வகமே. நாம் படுத்துறங்கும் மெத்தையிலுள்ள பஞ்சு வேதிப்பொருள். நாம் எண்ணங்களின் விளைவால், உங்கள் உடலில் ஏற்படும் வேதிமாற்றங்கள், நோய்களை உருவாக்குகின்றன அல்லது தீர்க்கின்றன.

நாம் அருந்தும் பாலில், லாக்டிக் அமிலம், காடியில் (வினிகர்) அசிட்டிக் அமிலம், புளியில் டார்ட்டாரிக் அமிலம், எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. நம் வயிற்றில் அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. அது இல்லையெனில், நாம் சாப்பிடும் எந்த உணவையும் சீரணிக்க இயலாது. நம் எலும்பில் கால்சியம் உள்ளது. வேதியியல் இல்லை எனில், நாம் இல்லை.
நாம் பயன்படுத்தும் பணம், கரிமச்சேர்மம். நாணயம் உலோகங்களாலானது. நாம் பயன்படுத்தும் கணிணி, திறன்பேசிகள் இவற்றிலுள்ள எலெக்ட்ரானிக் சில்லுகளில் சிலிக்கான் உள்ளது. நாம் பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் அனைத்தும் வேதிக் கூட்டுப்பொருள்களே.

காலையில் நாம் பருகும் தேநீரில் டான்னிக் அமிலம் உள்ளது. காபியில்  காஃபின் உள்ளது. நம் வீட்டு சமையல் எரிவாயுவில் பியூட்டேன், ஐஸோ ப்ரோப்பேன் கலவை உள்ளது. 
இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நம் உலகில் இருக்கும் அனைத்து பொருள்களும் வேதிச் சேர்மங்கள் என்று காணும்போது வியப்பாக உள்ளது.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்