நெல்லையில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் கவனத்திற்கு....

நெல்லையில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் கவனத்திற்கு....

நாளை முதல் நெல்லையிலிருந்து சென்னைக்கு கடைசி பஸ் சேவை காலை 10 மணியுடன் முடிகிறது...

வழக்கமான நாட்களில் மதியம் 12.30 மணி முதல் இரவு 10 மணி வரை நெல்லையில் இருந்து சென்னைக்கு பேருந்து போக்குவரத்து வசதி இருக்கும். 

ஆனால் தற்போது கொரோனா தடை காலத்தை முன்னிட்டு நாளை 20.04.2021 முதல் காலை 5.30 மணியிலிருந்து காலை 10 மணி வரை மட்டுமே சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படும். 

நெடுந்தூர பயணமான சென்னையைப் போல் ஆந்திர மாநிலமான திருப்பதிக்கும் நெல்லையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இனி காலை 7:30 மணி வரை மட்டுமே திருப்பதிக்கு பேருந்துகள் நெல்லையில் இருந்து இயக்கப்படும் - திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்...

Comments