நிழலில்லா நாள் 2021


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!
இன்று நாம் காணப்போகிற தகவல் நிழலில்லா நாள். 
என்னது நிழலில்லா நாளா?
ஆமாங்க... நிழலில்லா நாள் தான்!
அதுசரி... நிழல்னா என்ன?
நிழல் என்பது சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிா்கள் ஒளிபுகாப் பொருளால் தடைப்படும் பொழுது ஏற்படுகின்ற ஓா் இருண்ட பகுதியாகும்.   
சூரியன் காலையில் கிழக்கு பக்கம் இருக்கும் போது நிழல் மேற்கு பக்கத்திலும், மாலையில் மேற்கு பக்கத்திலும் விழும். நண்பகலில் நிழல் தரையில் விழாது என்கிறீர்களா? 
அதுதான் இல்லை...
நண்பகலிலும் சிறிதளவு நிழல் விழும். அதற்கு காரணம் சூரியனை பூமி சுற்றும் கோணம். ஆனாலும் வருடத்திற்கு இரண்டு முறை சூரியனின் நிழல் விழாது. அதனையே நாம் நிழலில்லா நாள் என்கிறோம். இந்த நிழலில்லா நாள் எல்லா நாடுகளிலும் தெரியாது. மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்கிலும் கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்கிலும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வைக் காண முடியும். 
நிழலில்லா நாளை, பூஜ்ய நிழல் நாள் என்றும் அழைப்பர். 
பூஜ்ய நிழல் நாள் என்பது அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் தெரியாது. ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடும். 
மரக்காணம் பகுதியில்
இந்த வருடத்தின் முதல் பூஜ்ஜிய நிழல் நாள் இந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி நண்பகல் 12 மணி 09 நிமிடத்தில் நிகழ இருக்கிறது.
திருநெல்வேலியில் ஏப்ரல் மாதம் 12ம் தேதி
நண்பகல் 12:20க்கும்
திருச்செந்தூர் பகுதியில் ஏப்ரல் 11ம்தேதி நண்பகல்12:19க்கும் திண்டிவனம் பகுதியில் ஏப்ரல் 22ம்தேதி நண்பகல் 12:10
அந்த நிகழ்வினை நண்பர்கள் சோதித்து அறிந்து கொள்ளுங்கள்.

Comments

Post a Comment

Comment from message

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்