பாக்டீரியாவுக்கு கலாம் பெயர்.

உலகில் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் உயிரினம் எது?
ம்...
ம்....
ம்.... 
சொல்ல முடியலையா?
உலகில் அதிகமாக வசிப்பவை
நம் கண்களுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் தான்.
பாக்டீரியாக்களில் நன்மை செய்பவை தீமை செய்பவை என இரு வகைகள் உள்ளன. 
    நுண்ணோக்கி என்கிற ஒன்று கண்டுபிடிக்காத வரை நுண்ணுயிர்கள் பற்றி ஏதும் அறியாமலே மனித இனம் இருந்தது. நுண்ணோக்கியை முதலில் கண்டறிந்தவர் ஆண்டன் வான் லீவன் ஹாக் ஆவார். கண்டுபிடிப்பு நிகழ்ந்தவுடன் விஞ்ஞானிகளின் முயற்சி மூலம் பல பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன.
ஆனாலும் நாம் கண்டறியாத பல பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள் இன்னும் உள்ளன.  
அவ்வாறு  ஒரு பாக்டீரியா கண்டறியப்பட்டது. 
சர்வதேச விண்வெளி நிலையத்தில்  பராமரிப்பு மற்றும் துப்புரவு அமைப்பான உயர் செயல்திறன் கொண்ட துகள் வடிகட்டி அல்லது ஹெப்பா வடிப்பானில்  இந்த வகை பாக்டீரியா காணப்பட்டது. இது அகில உலக விண்வெளி ஆய்வு மையத்தில் (இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில்) மட்டும் காணப்படுகிறது.இது வரை பூமியில் கண்டறியப்படவில்லை.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியா பலவிதமான கதிரியக்கத்தைத் தாங்கும். இது நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். மேலும் இது புற்றுநோயை எதிர்க்கும் திறனையும் கொண்டுள்ளது. ஆகவே இதனை மருத்துவத்திலும் பயன்படுத்தலாம் என்று
 விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் கதிர்வீச்சு சேதத்திலிருந்து பாதுகாக்கும் வேதிப்பொருட்களைத் தயாாிக்க இந்த பாக்டீாியா உதவியாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது
இவ்வாறு நமக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாவிற்கு நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விண்வெளியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாவின் பெயர் சோலிபேசில்லஸ் கலாமி Solibacillus kalamii. 
NASA pays tribute to APJ Abdul Kalam by naming new species after him

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்