துணிமணி: -துணி என்பது புதுத்துணியைக் குறிக்கிறது. மணி என்பது என்ன? முற்காலத்தில் ஆபரணங்கள் யாவும் அணிமணிகளாக இருந்தன. மணிகள் பதிக்கப்பட்டவையே அணிகலன்கள். புதுத்துணியையும் அணிமணி வகைகளையும் வாங்கியாயிற்றா என்ற பொருளில் வந்ததே துணிமணி.
தமிழர் முறை
வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும் நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில் தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை. பாடல் பொருள் - வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை.
Comments
Post a Comment
Comment from message