இந்த இனிய புத்தாண்டில் என் நண்பர் மாரிகணேசு மாவட்ட பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்ணாருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் வாழ்வில் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும் நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில் தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை. பாடல் பொருள் - வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை.
ராமன் விளைவு என்பது ஒளியின் அலைநீளம் மாற்றமடைவதை விளக்கும் ஒரு இயற்பியல் நிகழ்வு ஆகும். இதை கண்டுபிடித்ததற்காக சர் சி. வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ராமன் விளைவு நிகழ்வானது ஒளியின் இயல்பைப் புரிந்துகொள்ள உதவியதுடன், பல்வேறு பொருட்களின் அமைப்பையும் மூலக்கூறுகளையும் பகுப்பாய்வு செய்யும் ஒரு முக்கியமான கருவியாகவும் விளங்குகிறது. இந்த நிகழ்வானது பல்வேறு துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக, மருத்துவம், வேதியியல், பொருளியல், சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ராமன் விளைவு என்பது ஒரு முக்கியமான இயற்பியல் நிகழ்வு ஆகும், இது ஒளியின் இயல்பைப் புரிந்துகொள்ளவும், பல்வேறு பொருட்களின் அமைப்பையும் மூலக்கூறுகளையும் பகுப்பாய்வு செய்யவும் உதவுகிறது.
💐💐2021💐💐 புத்தாண்டே வா ! புது வாழ்வு தா! 🙏🙏🙏🙏🙏🙏🙏 இருபதில் சூழ்ந்த! இருளை நீக்க ! ஒளி ஆண்டாக வா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலையை இழந்த ! ஏழையை மீட்க ! வழி கண்டு வா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 கொரோனா என்னும் ,! கொடியவனைக் கொல்லும் ! ஊசி கொண்டு வா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 பள்ளிகளைத் திறக்கவும் ! கல்விதனில் சிறக்கவும் ! ஆசி கொண்டு வா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 இருபத்தோராம் ஆண்டே. ! இனிமையாக வாழவா ! இவ்வுலகத்தார் உள்ளங்களை ! என்றென்றும் ஆளவா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏 செ.முருகன் ஆசிரியர் கட்டளைக்குடியிருப்பு 💐💐💐💐💐💐💐
Comments
Post a Comment
Comment from message