ன,ண, ர,ற,ல,ள,ழ வேறுபாடு

பின்வரும் வினாக்களுக்கு உரிய பொருள் தரும் வார்த்தைகளை எடுத்து எழுதுக. 
1. சூரியன் இருக்கும் இடம்  ______________ ( வானம் / வாணம் )

2. பார்க்க உதவும் உறுப்பு _______
(கன் / கண் )

3. மருத்துவ குணம் கொண்டது ______________  ( தேன் / தேண்)

4. நுங்கு இந்த மரத்தில் கிடைக்கும்__________
( பணை / பனை )

5. எது வாங்குவதற்கும் இது அவசியமானது ______________
( பணம் / பனம் )

6. வீட்டைக் காக்கும் காவலன் _______________ (னாய் / நாய் ) 

7. கூட்டமாக வாழும், கழிவுகளை உண்ணும் ________________
( பண்ரி / பன்றி )

8. தேனைச் சேகரிப்பது
________________
( தேநீ / தேனீ )

9. களைப்பாக இருக்கும் போது குடிப்பது ____________ ( தேணீ / தேநீர்) 

10. மிகப்பெரிய காட்டு விலங்கு___________ ( யானை / யாணை )

 11.பூமியை இப்படியும் சொல்லலாம் _______________ ( உலகம் / உளகம் ) 



12. நீரைத் தேக்கி வைக்க உதவுவது ______ ( அனை / அணை )
13. எண்களில் முதலில் வருவது
___________
( ஒண்று / ஒன்று) 

14. உயரமான இடத்தில் ஏற உதவுவது ______________ ( ஏனி / ஏணி )

15. சுவரில் அடிப்பது__________ (ஆனி / ஆணி )

16. மீன் பிடிப்பவர் ______________
( மீணவர் / மீனவர் )

17. மார்கழி மாதத்தில் இது பெய்யும் _____________ (பணி/ பனி ) 

18. விரைவாக ஓடும் கொம்புகளை கொண்ட விலங்கு ______________(மாண் / மான் )

19. கடலில் வாழும் உயிரினம் ____________ ( நண்டு / நண்டு )

20. வேகமாக ஓடும் மனிதன் இதன் மீது ஏறிக்கொள்ளலாம் ___________ ( குதிறை / குதிரை)

21. வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடும் விலங்கு __________
( குரங்கு / குறங்கு ) 

22. யானையின் வேறு பெயர் ___________
( கறி / கரி )

23. நாம் உண்ணும் உணவை இப்படியும் கூறலாம். _____________
( சோறு / சோரு )

24. நிழல் தருவது ___________
( மறம் / மரம்)

25. மாட்டை கட்டி வைக்க உதவுவது _____________ 
( கயிறு / கயிரு )

26. கருப்பாக இருக்கும். பால் தரும் விலங்கு _____________
( எறுமை / எருமை )

27. சுறுசுறுப்பாக உணவு தேடும், கடிக்கும் _________ ( எறும்பு / எரும்பு )

28. கீச் கீச் என கத்தும் கூடு கட்டும்
___________( குறுவி / குருவி ) 

29. நம் கைகளில் இருப்பது ____________ ( விரல் / விறல் )

30. இதில் நீர் வேகமாக பாயும்  ____________
(ஆறு / ஆரு )

31. நாட்டை காப்பவர் ___________
( அறுசன் / அரசன் )

32. எறும்பு வாழும் இடம் 
__________( புர்று, புற்று) 

33. குளத்தில் பூக்கும் பூ__________
( தாமரை / தாமறை)

34. துணி தயாரிக்க பயன்படுகிறது _______________
(பருத்தி, பருத்தி)

35. நாம் குழம்பு செய்ய பயன்படுத்துவது ______________
( காய்கறி / காய்கரி )















( புற்கு / புற்று ) 

( பறுத்தி / பருத்தி


Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்