பை தினம்


வணக்கம். 
கணக்கு பாடத்துல வர்ற பை (π) பத்தி நமக்கு தெரியம். ஆனா பை தினம் என்னைக்குன்னு தெரியுமா? 
இங்க பாப்போம் அதுக்கு மொதல்ல நம்ம π பத்தி தெரிஞ்சுக்கணும் பை (π)ங்கறதுு
வட்டத்தோடு தொடர்புடையது.

அதாவது ஒரு வட்டத்தின் சுற்றளவு (பரிதி), அதன் விட்டத்தைப்போல பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். 

இப்ப நாம பை (π) தினத்துக்கு வருவோம். 
மார்ச் மாதம் 14ம் தேதிய 3.14 அப்படின்னு எழுதலாம் இல்லையா? இது பை (π)ன் மதிப்பைக் காட்டுகிறது அல்லவா? இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 14ம் தேதியை பை (π) தினமாக  கொண்டாடுறாங்க. 
இந்த நாள் தான் இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனின் பிறந்த நாள் ஆகும்.

Comments

Popular posts from this blog

எழுந்து நிற்போம்

English phrases

கண்ணதாசன் வரிகள்