மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு!
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு


சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
அருமையான பாட்டு இல்ல...
அமர்க்களம் படத்துல, பரத்வாஜ் இசையமைக்க, வைரமுத்து எழுத, பாலசுப்பிரமணியம் பாடி அஜித் கலக்கலா நடித்திருப்பார்.
என்ன காட்சி கண்ணுக்குள்ள தெரியுதா..... தெரியனும்....
சரி.. சரி.. இப்ப அந்த பாட்டு இல்ல விஷயம்... அந்த பாட்டுல வர்ற மேகங்கள் தான் விஷயம்.
நாம் தினமும் பார்க்கும் மேகத்தைப் பற்றி இங்கு கொஞ்சம் காண்போம்.
மேகம் என்னதுன்னா...
காற்று மண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பனித்துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும்.
நம்ம பூமியில் உள்ளது போன்றே வேறு கோள்களைச் சுற்றியும் மேகஙகள் காணப்படுகின்றன.
அங்குள்ள மேகங்கள் நீர் அல்லது பல்வேறு இரசாயனங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம்.
மேகத்துக்கு ஆங்கிலத்தில் கிளவுட் என்கிற பெயர் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது அது என்னவென்றால் ......
பழைய ஆங்கிலத்தில் குன்று அல்லது பாறைத் திரள் என்ற பொருள் கொண்ட கிளட் அல்லது கிளாடு என்ற சொல்லிலிருந்து கிளவுடு என்ற சொல்லின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், மழை மேகம் வானத்தில் சேகரமாகியுள்ள ஆவியாகிய நீரின் திரட்டு என்ற பொருளைப் பெற்றது. ஏனென்றால் இதன் தோற்றம் பாறைக் குவியல் போலவும் மற்றும் மேகக் குவியல் போலவும் இருந்ததால் ஓர் உருவகமாக இச்சொல்லின் பொருள் நீட்டிக்கப்பட்டது, காலப்போக்கில் மேகங்களை குறிக்க இந்த உருவகச் சொல்லுக்குப் பதிலாக பழைய ஆங்கிலச் சொல்லான கிளவுடு என்ற சொல்லே பொதுவாக பயன்பாட்டுக்கு வந்தது.
குறைந்த உயரங்களிலுள்ள மேகங்கள் சிறு நீர்த்துளிகளாலானவை. பூமியிலிருந்து இரண்டு முதல் நான்கு மைல் வரையான உயரங்களிலிருப்பவை ஆல்டோகுமுலசு (Altocumulus) முகில்கள் எனப்படும். அவை சிர்ரோகுயுமுலசு மேகங்களை விடப் பெரிய வட்டமான பொதிகளாகத் தோன்றும்.
அதே உயரங்களில் ஆல்டோசிடாரட்டசு (Altostratus) என்ற மென் படல வகை மேகங்களும் உள்ளன. இவை பல வேளைகளில் வானம் முழுவதையும் ஒரு மெல்லிய சாம்பல் நிறத் திரையைப் போல மூடியிருப்பதைப் பார்க்கலாம். அப்போது சூரியனும் சந்திரனும் மங்கலான ஒளி மொத்தைகளைப் போலத்தோறமளிக்கும்.
பூமியிலிருந்து சுமார் ஒரு மைல் உயரத்தில் சிடாராட்டோகியுமுலசு வகை மேகங்கள் காணப்படுகின்றன. அவை பெரியவையாக வைக்கோல் போர்களைப் போலத் தோற்றமளிக்கும்.
அதே உயரங்களில் நிம்போசிடாரட்டசு என்ற மழை தரும் மேகங்களும் உலவுகின்றன. அவை கருப்பாகத் தடித்தடியாக, உருவமில்லா மொத்தைகளாக இருக்கின்றன. அவற்றுக்கும் கீழே தரையிலிருந்து 600 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் சிடாரட்டசு ) என்ற வகை மேகங்கள் உள்ளன. அவை உயரத்திலமைந்துள்ள மூடுபனிப் படலங்களாகும். கியுமுலசு (cumulus), கியுமுலோ நிம்பசு வகை மேகங்கள் அளவில் பெரிது பெரிதாக தோற்றமளிக்கின்றன. இவைதான் இடி மின்னல்களையும் புயல் காற்றுகளையும் உண்டாக்குகின்றன.
Comments
Post a Comment
Comment from message