இன்று சந்திராஷ்டமம்

நேற்று நான் பள்ளிக்கு கிளம்பி செல்லும் போது வழியில் ஒரு வீட்டில் இருவரின் உரையாடலைக் கேட்டேன். 
அது
ஒருவர்:  நான் வேலைக்கு கிளம்புறேன்.
மற்றொருவர்: சரி, பார்த்துப் போ...
யாரிடமும் அதிகம் பேசாது!... ஏன்னா.... இன்னிக்கு உனக்கு சந்திராஷ்டமம்.....
இதைக் கேட்டவுடன் எனக்குள் ஒரு கேள்வி??? 
சந்திராஷ்டமம் என்றால் என்ன?

ஜோதிடர்கள் புழங்கும் இந்த வார்த்தை சாதாரண மக்களிடம் எப்படி புழக்கத்தில் வந்தது??

   உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா?

 சந்திராஷ்டமம் என்றால், சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம நாளாகும்.

இந்த வார்த்தை எப்படி சாதாரண மக்களிடம் புழக்கத்தில் வந்தது?

இதற்கான கிரடிட் மொத்தமும் தொலைக்காட்சி நிறுவனங்களையே சாரும். 
அவர்கள் தான் தினமும் காலையில் இதற்கென நேரம் ஒதுக்கி ஒளிபரப்பாகின்றது!

அதில் ஒன்றும் தப்பில்லை... ஆனால் அதே நேரம் அறிவியல் மற்றும் நிதி மேலாண்மை பற்றியும் சொல்ல காலையில் நேரம் ஒதுக்கலாமே!!!

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்