Posts

Showing posts from May, 2021

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு!

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு       அருமையான பாட்டு இல்ல... அமர்க்களம் படத்துல, பரத்வாஜ் இசையமைக்க, வைரமுத்து எழுத, பாலசுப்பிரமணியம் பாடி  அஜித் கலக்கலா நடித்திருப்பார்.  என்ன காட்சி கண்ணுக்குள்ள தெரியுதா..... தெரியனும்.... சரி.. சரி.. இப்ப அந்த பாட்டு இல்ல விஷயம்... அந்த பாட்டுல வர்ற மேகங்கள் தான் விஷயம். நாம் தினமும் பார்க்கும் மேகத்தைப் பற்றி இங்கு கொஞ்சம் காண்போம். மேகம் என்னதுன்னா... காற்று மண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பனித்துகள்கள்  சேர்ந்த ஒரு தொகுதியாகும்.  நம்ம பூமியில் உள்ளது போன்றே  வேறு கோள்களைச் சுற்றியும் மேகஙகள் காணப்படுகின்றன. அங்குள்ள மேகங்கள்  நீர் அல்லது பல்வேறு இரசாயனங்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். மேகத்துக்கு ஆங்கிலத்தில் கிளவுட் என்கிற பெயர் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது அது என்னவென்றால் ......                  பழைய ஆங்கிலத்தில் குன்று அல்லது பாறைத் திரள் என்ற பொருள் கொண்ட கிளட் அல்லது கிளாடு என்ற சொல்லிலி...