இன்றைய குறள்

திருக்குறள் :
குறள்: 752
அதிகாரம் : 76
இயல்: பொருட்பால்
பால்: கூழியல்
அதிகாரம்: பொருள் செயல்வகை

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

மு வ உரை :

பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

சாலமன் பாப்பையா உரை :

பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

கலைஞர் உரை :

பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்