நிழலில்லா நாள்

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
*நிழல் இல்லா நாள்*
 
   *ZERO SHADOW DAY* 
அன்பு நண்பர்களே
 வணக்கம் !

நிழல் இல்லா நாள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
    சூரியக் கதிர்கள் செங்குத்தாக, நிற்கும் பொருட்கள் மீது விழும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. அதாவது நிழல் பொருளின்அடியிலேயே விழுந்து விடுவதால் நமது கண்களுக்கு அவை தென்படாது. உதாரணமாக குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் நமது தலைக்கு நேராக மேலே இருக்கும்போது நிழல் எந்த பக்கமும் சாயாமல் காலுக்கு கீழே இருக்கும். இதை‘நிழல் இல்லாத நாள்’ என்று குறிப் பிடுகின்றனர்.
இந்த வானியல் அபூர்வ நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரேநாளில் தென்படுவதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும். இது சூரியனின் வடநகர்வு மற்றும் தென் நகர்வைப் பொறுத்து ஆண்டுக்கு 2 முறை வரும்.
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
    சூரியனின் கதிர்கள் புவியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவதால் ‘பூஜ்ஜிய நிழல் நாள்’ ஏற்படுகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும்.
இந்த நிகழ்வை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் நமது அட்சரேகையை நாமே கணக்கிட முடியும். 
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
அந்த நாள் இன்று (22.04.2022)தினம் திண்டிவனம் மற்றும் மரக்காணம் ஒன்றிய பகுதியில்  நடைபெறவுள்ளது.
நேரம்:  நண்பகல் 12.10 மணி

       ஆன்ட்ராய்டு செயலி (ZSD Finder App )மூலம் இந்திய வரைபடத்தில் உங்கள் ஊர் அமைந்துள்ள இடத்தை குறிப்பிட்டால் அங்கு ‘நிழல் இல்லாத நாள்’ எந்த தேதி எந்த நேரத்தில் ஏற்படும் என்பதை அறியலாம்.

அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்....
 புகைப்படங்களை பகிர்வோம் 

நண்பர்கள் தாங்கள் நிழலில்லா நாள் குறித்த புகைப்படங்களை இத்தளத்தின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நன்றி🌹🌹🌹

Comments

Popular posts from this blog

எதனாலே , எதனாலே ?

எளிமையான வாக்கியங்கள்